இன்று(3.10.2017) தலைமை செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிதி காப்பாளர்களான தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தலைவர் இரா.சண்முகராஜன்
தலைமைச்செயலகத்தலைவர் ஜெ.கணேசன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தலைவர் பெ.இளங்கோவன் தமிழ்நாடு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் தலைவர் கே.கணேசன் ஆகியோர் மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திருமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து புதிய பங்களிப்பு ஓய்வூதியதிட்டம் இரத்து செய்தல்,ஏழாவது ஊதியக்குழுவில் ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைந்து பரிந்துரைகளை அமுல்படுத்துதல், இடைக்கால நிவாரணம் மற்றும் ஊதிய கோரிக்கைகள் தொடர்பாக ஜாக்டோ-ஜியோ-கிராப்ட் கூட்டமைப்பின் கருத்துகளை எடுத்துரைத்தோம்.சுமார் 45நிமிடங்கள் இச்சந்திப்பு தொடர்ந்தது.
கோரிக்கைகளை உன்னிப்பாக கேட்டறிந்த மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் ஆவண செய்வதாக தெரிவித்துள்ளார் என இரா.சண்முகராஜன், B.Sc
ஒருங்கிணைப்பாளர் ஜாக் டோ - ஜியோ ( கிராப்) தெரிவித்தார்.
No comments:
Post a Comment