www.asiriyar.net

Sunday, 29 October 2017

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜ்களை அழிக்கும் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் ரீகால் அல்லது அனுப்பிய மெசேஜ்களை அழிக்கக் கோரும் அம்சம் (Delete for Everyone) வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் சார்ந்த தகவல்களை வழங்கி வரும் WaBetaInfo வெளியிட்டுள்ள தகவல்களில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்கள் இனி வாட்ஸ்அப் செலியில் தவறாக அனுப்பிய மெசேஜ்களை அழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருவதால், இந்த அம்சம் சீராக வேலை செய்ய மெசேஜ் அனுப்புபவர் மற்றும் அதனை பெறுவோரும் அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது.

புதிய அம்சம் ஜிஃப், எழுத்துக்கள், புகைப்படங்கள், வாய்ஸ் மெசேஜ், லொகேஷன், காண்டாக்ட் கார்டு, கோட்டெட் மெசேஜ் மற்றும் ஸ்டேட்டஸ் ரிப்ளை உள்ளிட்டவற்றிற்கு வேலை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இந்த அம்சம் எவ்வாறு வேலை செய்கிறது?

வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜை அழிக்கும் போது, வாட்ஸ்அப் சார்பில் ஃபேக் காப்பி மெசேஜ் நீங்கள் அனுப்பியவருக்கு அனுப்பப்படும். மறுபுறம் நீங்கள் மெசேஜ் அனுப்பியவருக்கு ஃபேக் காப்பி சென்றடைந்ததும், அவரது ஸ்மார்ட்போனில் நோட்டிபிகேஷன் சாட் ஹிஸ்ட்ரி உள்ளிட்டவை சேமிக்கப்படாது.

எனினும் குறிப்பிட்ட மெசேஜ் ஐடி டேட்டாபேசில் இருப்பதை வாட்ஸ்அப் முதலில் உறுதி செய்யும். அதன் பின், குறிப்பிட்ட மெசேஜ் அழிக்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் புதிய அம்சம் கீழ் வரும் நிலைகளில் வேலை செய்யாது:

- கோட்டெட் மெசேஜில் உள்ள மெசேஜ்களை திரும்ப பெற முடியாது.

- பிராட்காஸ்ட் பட்டியலில் அனுப்பப்பட்ட மெசேஜ்களையும் அழிக்க முடியாது.

- மெசேஜ் அனுப்பியது முதல் 7 நிமிடங்கள் வரை மட்டுமே இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும், 7 நிமிடம் கழித்து மெசேஜை திரும்ப பெறவோ, அழிக்கவோ முடியாது.


- இந்த அம்சம் வாட்ஸ்அப் அப்டேட் செய்யப்பட்ட பதிப்பை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே வேலை செய்யும். இதனால் மெசேஜ் அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவரும் செயலியை புதிய அப்டேட் செய்திருக்க வேண்டும். இந்த அம்சம் சிம்பயான் இயங்குதளம் கொண்டு இயங்கும் சாதனங்களில் வேலை செய்யாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment