புதிய, 100 ரூபாய் நோட்டுகள், அடுத்த ஆண்டு வெளியிடப்பட உள்ளன. ரிசர்வ் வங்கி வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள, ரூபாய் நோட்டு அச்சகங்களில், தற்போது, 200 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன; இந்த பணி, 2018 மார்ச்சில் முடியும். அதன்பின், மாற்றி வடிவமைக்கப்பட்ட, புதிய, 100 ரூபாய் நோட்டுகள், 2018 ஏப்., முதல், அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்படும்.
தற்போது, பயன்பாட்டில் உள்ள, 100 ரூபாய் நோட்டுகள், தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்; அதன்பின், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், படிப்படியாக, அந்த ரூபாய் நோட்டுகள், 'வாபஸ்' பெறப்படும். கடந்தாண்டு, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதன்பின், 500 - 2,000 ரூபாய் நோட்டுகள், புதிதாக வெளியிடப்பட்டன. தற்போது, 50 - 200 ரூபாய் நோட்டுகளும், புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment