www.asiriyar.net

Saturday, 30 September 2017

'டிஜிட்டல் கேம்ஸ்' ஆபத்து மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்களிடையே, 'டிஜிட்டல் கேம்ஸ்' குறித்த ஆபத்துகளை எடுத்து கூறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.ரஷ்யாவில் உருவான, 'ப்ளூ வேல்' என்ற நீல திமிங்கல ஆன்லைன் விளையாட்டுக்கு, சர்வதேச அளவில் இளைஞர்கள், மாணவர்கள் பலர் பலியாகினர்.

தமிழகத்திலும், ஒரு மாணவர் பலியானார். பலர், தற்கொலை விளிம்பிலிருந்து மீட்கப்பட்டனர். பள்ளி, கல்லுாரிகளில், ஆன்லைன் கேம்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் அவசரமாக நடத்தப்பட்டன.இதனிடையே, இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் அதிக அளவில், மொபைல் போன் மற்றும் கணினி விளையாட்டுகளில் ஈடுபட்டு, தேர்வில் கவனம் செலுத்துவது குறைந்துள்ளது. இதுகுறித்து பெற்றோர் பலர், உயர்கல்வித் துறைக்கு புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கமிஷனர், ஆர்.பழனிசாமி, அனைத்து, இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதன் விபரம் வருமாறு:டிஜிட்டல் கேம்கள் ஆபத்தானவை. 

அதனால், இளைய தலைமுறையினரின் படிப்பு பாதிக்கப்படும். இதுகுறித்து, அனைத்து கல்லுாரிகளிலும், விரிவான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்த வேண்டும்.அதேபோல், அனைத்து கல்லுாரிகளிலும், மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதுடன், யோகா, உடற்கல்வி வகுப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக, இரண்டு வாரங்களில், ஒவ்வொரு கல்லுாரியும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துக்கு அறிக்கை தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment