'நவம்பருக்குள், சம்பள உயர்வு வழங்க வேண்டும்' என, அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ - ஜியோ கிராப்' கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
'மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை, தமிழக அரசு தாமதமின்றி அமல்படுத்த வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகளுக்காக, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவினர், செப்., ௭ - ௧௫ வரை, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர். பின், நீதிமன்ற உத்தரவில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், போராட்டம் நடத்தாமல், அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட, ஜாக்டோ - ஜியோ கிராப் கூட்டமைப்பினர், சென்னையில் கூடி ஆலோசனை நடத்தினர். நவ., ௩௦ வரை காத்திருக்க, அச்சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். 'நவ., இறுதிக்குள், சம்பள உயர்வு குறித்த அறிவிப்பும், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஆய்வறிக்கையும் வராவிட்டால், போராட்டம் நடத்தலாம்' என, முடிவு செய்துள்ளனர்.
இந்த கூட்டத்தில், ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர், இளங்கோவன், தலைமை செயலக ஊழியர் சங்க தலைவர், கணேசன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி,
சண்முகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment