அடுத்த கட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு, மதுரையில், இன்று கூடி முடிவு எடுக்கிறது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், செப்., 7 முதல், 15 வரை தொடர் வேலை நிறுத்தம் நடந்தது.
பின், உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த வழக்கில், நேற்று அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, அக்., 23க்கு, வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகள் கூட்டம், இன்று பிற்பகல், 3:00 மணிக்கு, மதுரையில் நடக்கிறது. அதில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு எடுக்கப் படுகிறது.
No comments:
Post a Comment