www.asiriyar.net

Friday, 29 September 2017

பங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு

ங்களிப்பு ஓய்வூதியத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு, வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டன.

இது தொடர்பாக நடந்த நீதிமன்ற விசாரணையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு, ஓய்வூதிய பலன் வழங்கப்படவில்லை என, குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, 2003 ஏப்., 1க்கு பின், பணியில் சேர்ந்து, ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் மரணம் அடைந்தவர்கள் குறித்த விபரம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்களை, அறிக்கையாக அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment