அரக்கோணம், திருப்பூர், காட்பாடி உள்ளிட்ட இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPrEvzMF_Y47wW0Zjw1kGeleP1E4DW6wGytOEmHv8J7zmZV_KaaDqEpLjecE4eeQS4FLvDIR55znwU9KxMFaApKi5GxznVNG0-_sGsyUHyT7kw4oQaasxq0Gh__h5a6LtFfzhlD_TUq6g/s1600/%255BUNSET%255D+%252868%2529.jpg)
7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி விரைவாக ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஜாக்டோ - ஜியோ ஸ்டிரைக்கால் பல இடங்களில் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. பள்ளிகளுக்குச் செல்லாமல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பல்லாவரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 500 பேர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு, தேனியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் அரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment