நோக்கியாவின் மலிவு விலை ஸ்மார்ட்போனாக கூறப்படும் நோக்கியா 2 நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியகியுள்ளது.
ஆண்ட்ராய்டுஹிட்ஸ் வெளியிட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்களில், நோக்கியா 2 ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என நோக்கியா அதிகாரி தெரிவித்துள்ளார். நோக்கியா மியான்மர் பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த தகவல், எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் என்ற வகையில் தற்சமயம் வெளியான தகவல் நம்பகத்தன்மை வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வெளியீட்டு தவல்களை தொடர்ந்து மலிவு விலை நோக்கியா ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி நோக்கியா 2 ஸ்மார்ட்போன் 4ஜி வசதி, 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே மற்றும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு நௌக்கட் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 212 பிராசஸர் மற்றும் 1 ஜிபி அல்லது 2 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மெமரியை நீட்டிக்கும் வசதி வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ஒற்றை சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் என கூறப்படும் நோக்கியா 2 ஸ்மார்ட்போனில் 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் 4000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பம்சங்களுடன் இந்தியாவில் நோக்கியா 2 ஸ்மார்ட்போன் ரெட்மி 4 மற்றும் மோட்டோ சி பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும்.
இந்தியாவில் நோக்கியா 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6000க்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் விலை குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment