அதாவது, ஜியோ மேலும் ஒரு புரட்சியை உருவாக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு நாளும் புது புது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது ஜியோ. ஜியோவின் எந்தொரு அறிவிப்பாக இருந்தாலும் மக்களுக்கு சலுகையாகத்தான் தெரிகிறது.
ஜியோ ஸ்மார்ட் போன்
ஜியோ தற்போது , INDIA KA SMARTPHONE (JIO PHONE ) என்ற போனை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இலவசமாக என்றால்எவ்வளவு பெரிய விஷயம்.அதற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது
ரூ .1500 இல் (INDIA KA SMARTPHONE (JIO PHONE )
ஜியோவின் இந்த ஸ்மார்ட் போனை இலவசமாக பெறுவதற்கு முதலில் 1500 ரூபாய் கட்ட வேண்டும்.பின்னர் நீங்கள் வாங்கிய தேதியிலிருந்து அடுத்த 3 ஆண்டுகள் கழித்து, அந்த ரூ.1500 -ஐ திருப்பிக்கொடுத்துவிடும் ஜியோ.
இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி , ஜியோவின் ஸ்மார்ட்போனை பெற ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் (நாளை ) முதல் முன்பதிவு செய்யலாம் என இஷா அம்பானி அவர்கள் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
எப்படி முன்பதிவு செய்வது ?
ஜியோவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்ம் பூர்த்தி செய்து , ஜியோவின் இலவச போனை பெறலாம்.
அல்லது அருகில் உள்ள ஜியோ ஷோ ரூம் சென்று , உங்கள் முன் பதிவை உறுதி செய்யலாம் அல்லது my jio app மூலமாகவும் முன்பதிவை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment