தமிழக அமைச்சரவை மாற்றம்
அதிமுகவின் அணிகள் இணைந்த நிலையில் தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.உடுமலை ராதாகிருஷ்ணன் கால்நடைத் துறை அமைச்சராகவும், பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையும் மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் இணையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து, பிற்பகல் மூன்று மணிக்கு புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்படி புதிய அமைச்சரவை பதவி ஏற்றால் அதில், பிரிந்து சென்ற ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்களுக்கும் அமைச்சர் பொறுப்புக்கள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment