வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ந் தேதியன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. ஆனால் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியதாவது:
வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த இருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த ஆண்டு 11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
அந்த மாணவர்கள் பாதிக்காத வகையில் ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
No comments:
Post a Comment