குடும்பத்தில் ஒருவரின், 'ஆதார்' விபரத்தையும் பதியாத ரேஷன் கார்டுகளுக்கு, அடுத்த மாதம் முதல், ரேஷன் பொருட்கள் வினியோகம் நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில், ஆதார் கார்டு விபரங்கள் அடிப்படையில், உணவுத்துறை, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கி வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, 56 ஆயிரத்து, 936 ரேஷன் கார்டுதாரர்கள், குடும்பத்தில் உள்ள ஒருவரின் ஆதார் விபரத்தையும், ரேஷன் கடைகளில் பதிவு செய்யவில்லை. அவர்கள், 24ம் தேதிக்குள், தங்களின் ஆதார் விபரத்தை பதிவு செய்து, ரேஷன் கார்டுகளை புதுப்பித்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு, பதியாத ரேஷன் கார்டுகளை, உணவு வழங்கல் துறை முடக்கி வைக்க உள்ளது. இதையடுத்து, அந்த கார்டுதாரர்களுக்கு, அடுத்த மாதம் முதல், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படும்.
No comments:
Post a Comment