வ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தி தினத்தைஸ்ரீவிநாயக சதுர்த்தியாக வழிபடுகிறோம். விநாயக சதுர்த்தி .
எளிய முறையில் வீட்டில் பூஜை செய்வது எப்படி?
விநாயகர் சதுர்த்தி அன்று காலையில்தான் களிமண் விநாயகரைவாங்க வேண்டும். முதல் நாள் வாங்கி வைக்கக் கூடாது கிழக்குப்புறமாக தலைவாழை இலை (நுனி இலை) போட்டு அதன்மேல் நெல்பரப்பி, அதற்கு மேல் இன்னொரு நுனிஇலை போட்டு பச்சரிசியைநிரப்பி, அதன்மேல் களிமண் பிள்ளையார் வைக்கவேண்டும்.வடக்குப்பக்கம், மேற்குப்பக்கம் பார்க்க பிள்ளையாரை வைத்துபூஜிக்கலாம். ஆனால், தெற்குப்பக்கம் பார்த்து வைப்பதோ, பூஜிப்பதோகூடாது.
மஞ்சள் சந்தனம் குங்குமத்தை பிள்ளையார் நெற்றியில் வைக்கவேண்டும். பிம்பத்துக்கு தொப்புளில் நாணயம் வைத்து மூடவேண்டும். அதன்பின் பிள்ளையாருக்குப் பூணூல் அணிவித்து,வெள்ளெருக்கம்பூ மாலை மற்றும் அருகம்புல் மாலை சார்த்திபூஜிப்பது சிறப்பானது.
மணை அல்லது பாயில் அமர்ந்து கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூறிபிரார்த்தனை செய்ய வேண்டும்.வக்ரதுண்ட மஹாகாய கோடிஸூர்ய ஸமப்ரப |
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா ||
உடைந்த கொம்பையுடைய (ஸ்ரீ விநாயகப் பெருமான், வியாசர்சொல்ல ஸ்ரீமகாபாரதத்தைத் தன் கொம்பை உடைத்து எழுதினார்என்பது புராணக் கூற்று) பெரிய உடம்புடன் கூடிய பலகோடி சூரியபிரகாசமுடைய இறைவனே! என்னுடைய எல்லா காரியங்களிலும்எப்போதும் எந்தவிதமான இடைஞ்சலும் இல்லாமல் இருக்க நீ அருள்புரியவேண்டும்.
அடுத்து ஸ்ரீ விநாயகருக்கு உகந்த அருகம்புல்லால் கீழ்க்கண்டமந்திரத்தை 108 முறை கூறி
அர்ச்சிப்பது குடும்ப நலனுக்கு உகந்தது..
ஓம் கம் கணபதயே நமஹ |
மஞ்சள், குங்குமம், சந்தனம், நீர் சேர்த்த அரிசியில் (அட்சதை)புஷ்பங்களும் (வெள்ளெருக்கு, செவ்வரளி, செம் பருத்தி,வெண்தாமரை) அருகம்புல் கொண்டு அர்ச்சிக்கவும். மேலே சொன்னமந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்யவும்.
என்ன நைவேத்தியம்?
கொய்யா, இலந்தை, வாழைப்பழம், திராட்சை, நாகப்பழம்போன்றவற்றுடன் கரும்புத் துண்டு, தேங்காய், வெற்றிலை, பாக்குவைக்கவேண்டும்.
பின்பு வெண்பொங்கல், வெல்ல மோதகம், உப்பு மோதகம், அப்பம்,உளுந்து வடை, கறுப்பு சுண்டல், மொச்சக்கொட்டை வேகவைத்தது,இட்லி, தோசை, பாயசம், அவல், பொரியில் நாட்டுச் சர்க்கரை கலந்துநைவேத்தியம் செய்யவேண்டும். அதன்பின் கற்பூர ஆரத்தி காட்டிவிநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானது. பூஜை முடிந்ததும்அவரவர் சக்திக்கேற்ப பிரம்மச்சாரிக்கு அன்னமளித்து ஒரு வேஷ்டி (4முழம்) கொடுத்து, தட்சணை அளிப்பது குடும்பத்துக்கு நலம் தரும்.
களிமண் பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டுவிட்டுப் பின்புஓடும் நீரில் விட்டுவிடவேண்டும். முடியாதவர்கள் கிணறு, ஏரி,கடற்கரையில் விடலாம்.கொழுக்கட்டை
பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமானது கொழுக்கட்டை. கணபதிக்குத்தொந்தி பெருத்தது கொழுக்கட்டையாலே என்பார்கள். எனவே,பிள்ளையாருக்குப் பூஜை செய்யும்போது கொழுக்கட்டை படைக்கவேண்டும். இருபத்தோரு கொழுக்கட்டை படைக்கவேண்டும் என்றுசாஸ்திரம் கூறுகிறது.
No comments:
Post a Comment