தமிழக அமைச்சரவையில் சேரும் புதிய அமைச்சர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிற்பகலில் ஜெயலலிதா நினைவிடம் சென்று விட்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணிகள் இணைப்பிற்கு பின்னர் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இன்றே பதவியேற்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பாண்டியராஜன் நியமிக்கப்படலாம் என்றும் செங்கோட்டையனுக்கு பொதுப்பணித்துறை வழங்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மலைக்கு அமைச்சர் பதவி தரப்படுமா என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகள் இணைய இருப்பதால் அதிமுக நிர்வாகிகளுக்கு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அணிகள் இணைப்பு குறித்து தகவல் கிடைத்ததையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தொண்டர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த சாலையின் இருபுறமும் தடுப்புகள் போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment