www.asiriyar.net

Monday, 28 August 2017

உயிரை துச்சமென நினைத்து வெடிகுண்டை தோளில் சுமந்து ஓடி பள்ளி மாணவர்களை காப்பாற்றிய காவலர்

மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாகர் என்ற மாவட்டத்தில் சிதோரா என்றொரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 

அந்த பள்ளியிலிருந்து காவல்துறையினருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பள்ளி நிர்வாகத்தினர் தங்களது பள்ளி மைதானம் அருகே வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக பதற்றத்துடன் கூறியுள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் இருந்த தலைமை காவலர் ல் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கு சோதனையில் ஈடுபட்ட அவர் பள்ளி மைதான வளாகத்தில் சுமார் 10 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு இருப்பதை கண்டு அதிர்ந்தார்.

பின்னர் சுதாரித்து துரிதமாக செயல்பட நினைத்த அவர் பள்ளி மாணவர்களை காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தூக்கி கொண்டு வேக வேகமாக யாரும் இல்லாத பகுதிக்கு ஓடியுள்ளார். மாணவர்கள் மற்றும் மக்கள் யாருடைய உயிருக்கும் சேதம் ஏற்பட்டு விட கூடாது என்ற நோக்கில் சுமார் 1 கி.மீ தூரம் தனது உயிரை பணயம் வைத்து வெடிகுண்டை தோளில் தூக்கி வைத்தபடி ஓடினார். யாரும் இல்லா பகுதிக்கு எடுத்து சென்று பின் அந்த வெடிகுண்டை அப்புறப்படுத்தியுள்ளார். பின் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த வெடிகுண்டு ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்தது. இதுதொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன தனது உயிரை பற்றி சிற்தும் யோசிக்காமல் துணிச்சலுடன் மாணவர்களின் உயிரை காப்பாற்றிய தலைமை போலீஸ் காவலருக்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். துணிச்சல் காவலரான அபிஷேக் படேலை கவுரவிக்கும் விதமாக  அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், அபிஷேக்கிற்கு ரூ.50,000 பரிசு வழங்கியுள்ளார். 

No comments:

Post a Comment