புதிய 200 ரூபாய் நோட்டுகள், நாளை முதல் பயன்பாட்டுக்கு வர இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சாமானியர்களின் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக்கொண்டு,புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, புதிய 200 ரூபாய் நோட்டு என்கிற ரீதியில் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் உலா வந்தது. இந்த நிலையில், புதிய 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதை அரசாணைமூலம் மத்திய அரசு நேற்று உறுதிப்படுத்தியது. இந்த நிலையில், பிரகாசமான மஞ்சள் நிறத்தில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் வெளியாகும் இந்த 200 ரூபாய் நோட்டில், சாஞ்சி ஸ்தூபி இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment