www.asiriyar.net

Friday, 6 July 2018

Venn Diagram – Basics (வென் வரைபடம்- அடிப்படை)




அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் அனைவரும் காண இருப்பது வென் வரைபடம் வரைய மற்றும் அதனைப் பற்றி இதற்கு முன் அறிந்திராத அனைவரும் அதனைப் பற்றிய எளிய தெளிவான புரிதலை அறியச் செய்யும் வகையில் இப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது.
படம் 1: 
A
படம் 1 ல் நாம் பார்ப்பது வென் வரைபடத்தில் A எனும் பகுதி ஆகும்.
படம் 2:
B
  படம் 2 ல் நாம் பார்ப்பது வென் வரைபடத்தில் B எனும் பகுதி ஆகும்.
படம் 3:
AUB
படம் 3 ல் நாம் பார்ப்பது வென் வரைபடத்தில் AUB எனும் பகுதி ஆகும். இங்கு Uஎன்பது ஆங்கிலத்தில் Union என்று அழைக்கப்படும். தமிழில் சேர்ப்பு எனக் கொள்ளலாம். A ஐயும் Bஐயும் சேர்க்க வேண்டும் என்பதை இதன் மூலம் அனைவரும் அறிந்துகொள்ளலாம்.
படம் 4:
A^B
படம் 4 ல் நாம் காண்பது வென் வரைபடத்தில் A∩B எனும் பகுதி ஆகும். இங்கு என்பது ஆங்கிலத்தில் Intersection என்று அழைக்கப்படும். தமிழில் பொதுவானஎனக் கொள்ளலாம். அதாவது A யிலும் B யிலும் இருக்கும் பொதுவானவற்றைக் கண்டறிந்து குறிப்பிட வேண்டும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

படம் 5:
A-B
படம் 5ல் நாம் காண்பது A-B என்பதாகும். இங்கு Aக்கும் Bக்கும் இடையில் கழித்தல் குறி இருக்கிறது. கழித்தல் முறைப்படி, A மற்றும் B ஆகியவற்றில் Bஐ மட்டும் கழித்து, அதாவது Bஐ முழுமையாக நீக்கிவிட்டு A ஐத் தனியாகக் காண்பிக்க வேண்டும்.
படம் 6:
B-A
படம் 6ல் நாம் காண்பது B-A என்பதாகும். இங்கு Bக்கும் Aக்கும் இடையில் கழித்தல் குறி இருக்கிறது. கழித்தல் முறைப்படி, B மற்றும் A ஆகியவற்றில் Aஐ மட்டும் கழித்து, அதாவது Aஐ முழுவதுமாக நீக்கிவிட்டு B ஐத் தனியாகக் காண்பிக்க வேண்டும்.
படம் 7: 
U
படம் 7ல் நாம் காண்பது Ʊ எனப்படும் Universal Set எனும் பகுதியாகும். அதாவது கட்டத்திற்குள் உள்ள அனைத்துப் பகுதிகளும்  Ʊ எனப்படும் Universal Setக்குள்ளேயே அடங்கும். அதனால் தான் கட்டத்திற்குள் உள்ள அனைத்துமேகுறிக்கப்பட்டுக் காட்டப்பட்டுள்ளது.
படம் 8:
A'
படம் 8ல் நாம் காண்பது A’ என்பதாகும். அதாவது Ʊ எனப்படும் Universal Setல் Aன் பகுதியை மட்டும் தவிர்த்து, Ʊ ல் உள்ள அனைத்துப் பகுதிகளையும் சுட்டிக்காண்பிப்பதாகும்.
படம் 9:
B'
படம் 9ல் நாம் காண்பது B’ என்பதாகும். அதாவது Ʊ எனப்படும் Universal Setல் Bன் பகுதியை மட்டும் தவிர்த்து, Ʊ ல் உள்ள அனைத்துப் பகுதிகளையும் சுட்டிக்காண்பிப்பதாகும்.

No comments:

Post a Comment