அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் குழு ஆய்வு நடத்த உள்ளதால், பள்ளி பதிவேடுகள் பராமரிப்பதை உறுதிசெய்து கொள்ளும் படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மார்ச் மூன்றாம் வாரத்தில், திட்ட இயக்குனர் தலைமையில் குழு பார்வை நடக்கவுள்ளது.
இதனால், அனைத்து பள்ளிகளிலும், எட்டு வகை பதிவேடுகள் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். மாணவர்களின் தர முன்னேற்ற நிலை ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து, ஆய்வுக்கூட்டம் நடக்கவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment