www.asiriyar.net

Thursday, 1 March 2018

ஏர்செல்லைத் தொடர்ந்து ஜியோவும் வேலை செய்யவில்லை.. ஏன்?



ஏர்செல்லுக்கு அடுத்து ஜியோவும் வேலை செய்யவில்லை என்று புகார்கள் அளிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக தமிழகத்தில் இருந்து நிறைய புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.


ஏர்செல் மொபைல் சர்வீஸ் கடந்த வாரம் சில நாட்கள் பலர்க்கும் எடுக்கவில்லை. இதனால் சிலர் வேறு மொபைல் சர்விஸுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்தியா முழுக்க இந்த பிரச்சனை இருந்தது. தற்போது ஜியோ இதற்கு தற்காலிக செயலிழந்துள்ளது.

கோரிக்கை
தற்போது தங்கள் நிறுவனத்தை திவால் ஆகிவிட்டதாக அறிவிக்க வேண்டும் என ஏர்செல் கோரிக்கை வைத்து இருக்கிறது. தேசிய கம்பெனிகள் தீர்ப்பாயத்திற்கு ஏர்செல் நிறுவனம் மனு கொடுத்து இருக்கிறது. இதில் விரைவில் முடிவெடுக்கப்படும்.


எவ்வளவு நேரம்
இந்த நிலையில் சரியாக நேற்று மாலை 6 மணிக்கு ஜியோ வேலை செய்யாமல் போய் இருக்கிறது. இரவு 3 மணிக்கு சரி ஆகிவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் இரவு முழுக்க ஜியோ சரியாகவில்லை. இதனால் மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள்.



இணையம்
ஆனால் இந்த ஜியோ பிரச்சனையில் போன் மட்டுமே வேலை செய்வதில்லை. மற்றபடி இணையம் அனைவருக்கும் நன்றாகவே வேலை செய்து இருக்கிறது. இதுகுறித்து நேற்று மட்டும் சென்னையில் இருந்து நூற்றுக்கணக்கான புகார்கள் சென்று இருக்கிறது.


இன்றும் தொடர்கிறது
இந்த நிலையில் இந்த பிரச்சனை இன்றும் தொடர்கிறது. முக்கியமாக சென்னை, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து இன்றும் பிரச்சனை தொடர்வதாக புகார் வந்து இருக்கிறது. இணையதளம் வேலை செய்தாலும் போன் பேச முடிவதில்லை.


விளக்கம் கொடுத்தது
தற்போது இதுகுறித்து ஜியோ நிறுவனம் விளக்கம் கொடுத்து இருக்கிறது. அதன்படி ''எங்களுடைய சிக்னல் டவர்களில் எதோ பிரச்சனை இருக்கிறது. விரைவில் இதை சரி செய்து விடுவோம். அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment