www.asiriyar.net

Thursday 15 March 2018

வாட்ஸ்அப் பேமண்டு அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ்அப் பே அம்சத்தில் யூபிஐ (யூனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதற்கு பயனர்களின் வங்கி கணக்கை இதனுடன் இணைத்து, பணப் பரிமாற்றத்தை துவங்கும் வகையில் ஒரு தனிப்பட்ட யூபிஐ குறியீடு பெற்று கொள்ள வேண்டும்.

உடனடி மெசேஸிங் அப்ளிகேஷனான வாட்ஸ்அப், பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பிறகு, வாய்ஸ் கால், வீடியோ கால், ஸ்டோரீஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில், இந்நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது.

இதன்மூலம் உங்கள் தொடர்பிற்கு ஒரு வீடியோ அல்லது படங்களை அனுப்புவது போல, டிஜிட்டல் பேமண்டுகளை அனுப்புவதற்கு உதவிகரமாக இருக்கும். இப்போது ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகியவற்றில் மட்டுமே வாட்ஸ்அப் பே அளிக்கப்படுகிறது என்பதோடு, இப்போதைக்கு இந்தியாவில் மட்டுமே இதை இயக்க முடிகிறது.

வாட்ஸ்அப் பே அம்சத்தில் யூபிஐ (யூனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) மூலம் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதற்கு பயனர்களின் வங்கி கணக்கை இதனுடன் இணைத்து, பணப் பரிமாற்றத்தை துவங்கும் வகையில் ஒரு தனிப்பட்ட யூபிஐ குறியீடு பெற்று கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் பேமண்ட்ஸை பயன்படுத்தி எப்படி பணப் பரிமாற்றம் செய்வது என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

வாட்ஸ்அப் பேமண்ட்ஸில் வங்கி கணக்குகளை இணைக்கும் முறை

படி 1: வாட்ஸ்அப் திறந்து -> அமைப்புகள் -> பேமண்ட்ஸ்

படி 2: பேமண்டு பக்கத்தில், உங்கள் வங்கி கணக்கை இணைத்து, வங்கி கணக்கு தகவல்களைப் பூர்த்தி செய்யவும்.

படி 3: விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் ஏற்பதாக இருந்தால், ஏற்கிறேன் மற்றும் தொடரவும் என்பதை தட்டவும்.

படி 4: எஸ்எம்எஸ் மூலம் உறுதிப்படுத்துவதை தட்டி, இணைப்பு பணியை துவங்கும் செயல்பாட்டை தொடரவும்.

படி 5: யூபிஐ ஆதரவை கொண்ட வங்கிகளின் பட்டியலை இப்போது நீங்கள் காணலாம். இதில் பொதுவாக வங்கி பெயர் மற்றும் உங்கள் வங்கி கணக்கின் கடைசி நான்கு இலக்கங்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

படி 6: ஒரே வங்கியில் பல கணக்குகளை நீங்கள் வைத்திருக்கும் பட்சத்தில், இதில் பல்வேறு தேர்வுகளை அது காட்டும். இதில் இருந்து இந்த அப்ளிகேஷன் உடன் இணைக்க விரும்பும் ஒரு கணக்கை நீங்கள் தேர்ந்தெடுக்கவும்.

படி 7: நீங்கள் வங்கியைத் தேர்ந்தெடுத்த பிறகு, அந்த அப்ளிகேஷனுக்கு தேவையான விவரங்களைப் பெற்று, உங்கள் வங்கி கணக்கு எண்ணை காட்டும். இவை எல்லாம் முடிந்த பிறகு, முடிந்தது என்ற செய்தி உங்களுக்கு காட்டப்படும்.

வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் வழியாக பணம் அனுப்புதல்

படி 1: முதலில் வாட்ஸ்அப் தொடர்பில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது சாட் பகுதியைத் திறக்கவும்.

படி 2: ஆன்ட்ராய்டில் சேர்ப்பு (குறியீடு) பொத்தானை தட்ட வேண்டும். ஐபோனில் பிளஸ் பொத்தானை தட்ட வேண்டும்.

படி 3: இப்போது பணத்தை அனுப்புவதற்கு, பேமண்டு என்பதன் மீது தட்டி, நீங்கள் அனுப்ப விரும்பும் பணத்தை உள்ளிடவும். அதனுடன் ஒரு குறிப்பை செய்தியோடு இணைத்து அனுப்ப முடியும்.

படி 4: பேமண்டு தேர்வை உறுதி செய்வதற்கு, நீங்கள் இணைத்துள்ள வங்கியின் யூபிஐ குறியீட்டை உள்ளிட்டவும்.

No comments:

Post a Comment