நியூயார்க்: பூமியை விட மூன்று மடங்கு அதிகம் தண்ணீர் கொண்ட கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பெயர் 'டபுள்யூஏஎஸ்பி-39 பி' என்பதாகும்.
இது பூமியில் இருந்து 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. நாசா விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள்.அந்த கிரகத்தில் இருந்து தண்ணீர் ஆவி ஆவதை வைத்தும், அது எதிரொளிக்கும் நிறத்தை வைத்தும் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.எவ்வளவு தண்ணீர் தண்ணீர்இந்த கிரகத்தில் சனி பூமியை விட அதிக அளவு தண்ணீர் இருக்கிறது.
சனி கிரகத்தில் அளவை வைத்து கணக்கிட்டால் அதை விட 3 மடங்கு தண்ணீர் இந்த கிரகத்தில் இருக்கிறது. இதுவரை நாசா கண்டுபிடித்த எந்த கிரகத்திலும் இந்த அளவிற்கு தண்ணீர் இருந்தது இல்லை.சூரியனை சுற்றும் அதற்கும் சூரியன்அதேபோல் இந்த கிரகமும் அதன் சூரிய குடும்பத்திலேயே இருக்கிறது. இதன் சூரியனுக்கு டபுள்யூஏஎஸ்பி-39 என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அதன் சூரிய குடும்பத்தில் எத்தனை கிரகம் இருக்கும் என்று கூறப்படவில்லை. ஆனால் இந்த கிரகம் சூரியனை 4 நாட்களுக்கு ஒரு முறை சுற்றுகிறது.வித்தியாசம் பூமியில் இருந்து என்ன வித்தியாசம்இந்த கிரகம் சூரியனை சுற்றினாலும் தன்னை தானே பூமியைபோல சுற்றுவது இல்லை.
இதனால் இதன் ஒரு பகுதி எப்போது வெயிலாக இருக்கும். ஒரு பகுதி எப்போதும் இருளாக இருக்கும். அதாவது ஒரு பகுதி சூரியனை பார்த்துக் கொண்டு இருக்கிறது.ஆனாலும் வெப்பம்பூமிக்கும் சூரியனுக்கும் எவ்வளவு தூரம் இருக்குமோ, அதைவிட 20 மடங்கு குறைந்த தூரம் இந்த கிரகத்திற்கும் அதன் சூரியனுக்கும் இருக்கிறது. இதனால் சூரியன் படும் பகுதியில் 776.7 டிகிரி வரை வெப்பம் இருக்கிறது. இதனால் அங்கு மனிதர்கள் வாழ முடியாது. ஆனால் வேறு உயிரினம் வாழ வாய்ப்புகள் இருக்கிறது.
No comments:
Post a Comment