www.asiriyar.net

Saturday 3 March 2018

தேர்வு முறைகேடு புகாரில் 16 மாணவர்களுக்கு,'செக்'

பிளஸ் 2, மொழிப்பாடம் இரண்டாம் தாள் தேர்வில், வினாத்தாள் எளிமையாக இருந்தும், திருச்சி மாவட்டத்தில், 13 மாணவர்கள் காப்பி அடித்து பிடிபட்டனர்;கடலுாரில், மூன்று தனித் தேர்வர்கள் சிக்கியுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான முதல் தாள் தேர்வு நடந்தது. இதில், காப்பி அடித்தல், 'பிட்' வைத்திருத்தல் போன்ற முறைகேடுகளில், 10 பேர் சிக்கினர். இவர்களில் ஆறு பேர், பள்ளிக்கு வராமல் படித்து, தேர்வில் பங்கேற்ற, தனித் தேர்வர்கள்.

மொழிப்பாடங்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, நேற்று நடந்தது.இதில், தமிழ், சமஸ்கிருதம், பிரெஞ்ச், அரபிக் உட்பட அனைத்து மொழிகளிலும், வினாத்தாள் எளிதாகவே இருந்தது. இந்த தேர்வில், அதிகபட்சமாக, திருச்சியில், 13 பேர் காப்பியடித்து சிக்கினர்; கடலுாரில், மூன்று தனித்தேர்வர்கள் சிக்கினர்.

முறைகேடில் சிக்கியவர்களின் விடைத்தாள்கள், தனியாக பிரித்து வைக்கப்பட்டன. தவறு செய்தவர்களிடம், காப்பி அடித்தது தொடர்பான வாக்குமூலமும் எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்பட்டு, அவர்களின் கையெழுத்து பெறப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment