www.asiriyar.net

Sunday 25 February 2018

MBBS ENTRANCE ANNOUNCED FOR "JIPMER"

புதுச்சேரி ஜிப்மர் கல்லூரியில் ஜூன் 3ஆம் தேதி  மருத்துவ மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 200 எம்பிபிஎஸ் இடங்கள் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும். அதன்படி, 2018ஆம் ஆண்டுக்கான ஜிப்மர் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. நுழைவுத் தேர்வுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உரிய பரிசோதனைக்குப் பிறகே மாணவர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள். 

ஆள் மாறாட்டத்தைத் தடுப்பதற்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு மற்றும் நிழற்படம் எடுக்கும் பணிகள் ஏற்பாடு செய்யப்படும். தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும்.

மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 25ஆம் தேதி நடைபெறும். மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும். இறுதிக்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெறும். செப்டம்பர் 30ஆம் தேதி மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாள் என ஜிப்மர் மருத்துவக் கல்லூரி தெரிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டு, 200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு 1 லட்சத்து 89 ஆயிரத்து 663 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment