www.asiriyar.net

Sunday 25 February 2018

தமிழகத்தில் உள்ள உதவிபெறும் கல்வி நிறுவன நியமனங்களில் முறைகேடு

தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பள்ளிகளில் நடைபெறும் நியமன முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  

தமிழக அரசு நிதிஉதவி வழங்கி தனியாரின் பங்களிப்புடன் பள்ளி, கல்லூரிகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களிடம், அரசு நிர்ணயிக்கும் கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு, அரசே ஊதியம் வழங்குகிறது. அரசு பணிக்கு நிகரான இந்த பணியிடத்திற்கு, நேரடி நேர்காணல் மூலம் மட்டுமே நியமனங்கள் நடக்கிறது.

உதவிபெறும் கல்வி நிறுவனத்தினர் தாங்களாகவே, பணியிடங்களை பூர்த்தி செய்துகொண்டு, அரசிடம் இருந்து ஊதியம் பெற்று வழங்குகின்றனர். உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் அனைத்து நியமனங்களிலும் முறைகேடு நடந்து வருவதால், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசு ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில், 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளும், 130க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளும் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்தாலும், அதைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதை வாடிக்கையாக ெகாண்டுள்ளனர். 

இந்நிறுவனங்களில் நடைபெறும் முதல்வர், பேராசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியர் மற்றும் இதர பணியாளர் நியமனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. கல்லூரிகளை பொறுத்தவரை யூஜிசி விதித்துள்ள வழிமுறைகளுக்கு மாறாக, இடஒதுக்கீடு, நேர்காணல், தேர்வு முறை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

இதேபால், பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கும்போது, தகுதித்தேர்வு தேர்ச்சியில் இருந்து பணி முன் அனுபவம் வரை பெரும்பாலானவை போலிச் சான்றிதழ்களே சமர்ப்பிக்கப்படுகின்றன. கல்வி நிறுவனங்களிடம் குறிப்பிட்ட தொகையை பெறும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள், அவர்கள் வழங்கும் பணிநியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துவிடுகின்றனர். இதனால், கூடுதல் தகுதியுள்ளவர்கள் பணம் இல்லாத காரணத்தால் வெளியேற வேண்டிய கட்டாயம் உள்ளது. 

குறுக்கு வழியில் பணியில் சேருபவர்கள், நிர்வாகத்தினர் கேட்கும் தொகையை ஒரு வருடத்திற்குள் வழங்காவிட்டால், பொய் புகார்கள் மூலம் அவர்களை பணியில் இருந்து விடுவிக்கும் நிகழ்வும் நடந்துள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளில் நடந்த நியமனங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். பணம் கொடுத்து பணியில் சேர்ந்த தகுதியில்லாதவர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

2,500 பணிநியமனங்கள் நிறுத்திவைப்பு: தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில், கடந்த 2011ம் ஆண்டு முதல் சுமார் 3,000 பணிநியமனங்கள் மேற்ெகாள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிற்கும் தலா ரூ.7 லட்சம் வரை, முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், பள்ளி நியமனங்களுக்கும் பல கோடி வரை அமைச்சர்களுக்கு தரப்பட்டுள்ளது. 

அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து பள்ளி மற்றும் கல்லூரி இயக்குநரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, புதிதாக பணியாளர்களை நியமிக்க அனுமதி கோரப்படும். அனுமதி வழங்கப்படும் ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக பணம் நிர்ணயம் செய்து வழங்கப்பட வேண்டும். 

ஆனால், சென்னை, ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், பணம் வழங்க மறுத்து வருகின்றனர். இதனால், அந்நிறுவனங்களில் நிரப்ப வேண்டிய சுமார் 2,500க்கும் மேற்பட்ட பணியிடங்கள், அனுமதி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

1 comment:

  1. In annai vailankanni high school a teacher was appointed in a sactioned place since the teacher who worked in that place is transfered to government school so the above said teacher is appointed in that vacant placefrom 2011 sebtember but now the north deo office force the management to pay 50000 rs for continuing that teacher to work. Now the management force this teacher to pay atleast 25000 rs regaring the continuity of that post.they threten the teacher also kindly help the teacher to continue her work without paying lancham.avhs
    Chennai39

    ReplyDelete