www.asiriyar.net

Thursday, 15 February 2018

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை உச்ச வரம்புஅதிகரிப்பு.. மத்திய அரசு அதிரடி

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கானஆண்டு வருமான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.


இந்தியா முழுக்க இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. முக்கியமாக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போது இந்த மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உதவித்தொகை பெறுவதற்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.அதன்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ. 44,500லிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இனி ஆண்டு வருமானம் 2.5 லட்சம் வரை இருக்கும் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் உதவித் தொகை பெற முடியும்.அதேபோல் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது

No comments:

Post a Comment