மத்திய பட்ஜெட்டில் மாத சம்பளக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஒரு சிறு சலுகையும் கானல் நீராக மாறியுள்ளது அம்பலமாகியுள்ளது.
ஆம். நிரந்தர கழிவு என்ற பெயரில் ரூ.40,000 அறிவித்துவிட்டு, நைசாக மெடிக்கல் செலவு மற்றும் பயணப்படி (conveyance) ஆகியவற்றை நீக்கிவிட்டது மத்திய அரசு.
இதனால் மிக, மிக சொற்பமான தொகை மட்டுமே மாத சம்பளம் வாங்கும் பிரிவினருக்கு எஞ்சப்போகிறது. சலுகை கொடுப்பதை போல கொடுத்துவிட்டு, ஏற்கனவே இருந்த சலுகையை பறித்துவிட்டது மத்திய அரசு.2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார் மத்தியநிதி அமைச்சர் அருண் ஜேட்லி.அப்போது வருமான வரி நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று அவர் தெரிவித்தார். ஆனால் நிலையான கழிவு (standard deduction) என்ற பெயரில் ரூ.40,000 அறிவிக்கப்பட்டது.2006-07ம் நிதியாண்டுக்கு முன்புவரை நிலையான கழிவு என்பது நடைமுறையில் இருந்த ஒன்றுதான். அதிகபட்சமாக அப்போது ரூ.30,000 வரை நிலையான கழிவு அனுமதிக்கப்பட்டது. எனவே இதே நடைமுறை மீண்டும் வந்துள்ளதாகவே மக்கள் கருதி மகிழ்ச்சியடைந்தனர். மாத சம்பளதாரர்களுக்கு கிடைத்த ஒரே நல்ல அறிவிப்பு இதுதான் என நினைத்தனர். ஆனால், அந்த நினைப்பிலும் மண்ணை அள்ளி போட்டுவிட்டனர் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது.நிலையான கழிவாக ரூ.40,000 அளிப்பதாகவும், அதற்குமெடிக்கல் பில் மற்றும் பயணப்படி சான்றுகளை கொடுக்க வேண்டும் என்று மட்டுமே ஜேட்லி கூறியிருந்தார். ஆனால் ஏற்கனவே இருந்த அவ்விரு சலுகைகளும் பறிக்கப்பட்டுவிட்டது இப்போது தெரியவந்துள்ளது.
உதாரணத்தை பாருங்கள்: ஒருவரின் ஆண்டு, மொத்த வருமானம் ரூ.5,34,200 என்று வைத்துக்கொள்வோம். இதில், பயணப்படி மற்றும் மெடிக்கல் செலவீனங்களுக்கு அதிகபட்சமாக, முறையே ரூ.19,200 மற்றும், 15,000 ஆகியவற்றை காண்பித்து வருமானத்தை குறைத்து காண்பிக்கலாம். அப்படி காண்பித்தால் அவரது ஆண்டு வருமானம் ரூ.5,00000 என்ற அளவுக்கு குறையும். அதற்கு மட்டும் வரி செலுத்தினால் போதும்.ஆனால் 2018-19ம் நிதியாண்டில் அந்த இரு செலவீனங்களையும் காண்பித்து நீங்கள் சலுகை பெற முடியாது. அந்த நடைமுறை நீக்கப்பட்டுவிட்டன. அதற்கு பதிலாகத்தான் நிலையான கழிவு என்ற பெயரில்ரூ.40,000 வழங்கப்படுகிறது. எனவே இது சலுகை என்று கூற முடியாது. வேறு பெயரில் ஏறத்தாழ அதே தொகையை மட்டுமே சலுகையாக பெற அனுமதி கொடுத்துள்ளார்கள் என்றுதான் சொல்ல முடியும்.இப்போது, முந்தைய உதாரணத்தை போலவே, ஆண்டு, மொத்த வருமானமாக ஒருவர் ரூ.5,34,200 ஈட்டுகிறார் என வைத்துக்கொள்வோம். அதில் ரூ.40,000 என்ற நிலையானகழிவை கழித்துக்கொள்ளுங்கள். அவர் 4,94,200 ரூபாய் வருமானம் ஈட்டுவதாக கணக்கில் வரும். இப்படி பார்த்தால், கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் அந்த தனிநபர் ரூ.40,000 நிலையான கழிவை பெற்ற பிறகும், வெறும் ரூ.5,800 மட்டுமே மிச்சப்படுத்தமுடியும். ஆனால் மக்களுக்கு ஏதோ ரூ.40,000 மிச்சப்படுத்த மத்திய அரசு வகை செய்துவிட்டதை போன்ற ஒரு தோற்றத்தை பட்ஜெட் உருவாக்கியுள்ளது.
ஒருவேளை, அடேங்கப்பா, ரூ.5,800 மிச்சப்படுத்த வழி ஏற்பட்டுவிட்டதே என்று மகிழ்பவரா நீங்கள்..? கொஞ்சம் பொறுங்கள். அதற்குத்தான் அடுத்த ஆப்பு வைத்துள்ளார்கள். ஆம், வருமான வரி மீதான செஸ் வரி 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் எஞ்சிய சொற்பபணமும், செஸ் என்ற பெயரில் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிடும்.இதே வருவாயை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.
4 சதவீத செஸ் வரியையும் சேர்த்து நீங்கள் 12,698 ரூபாயை வருமான வரியாக செலுத்த வேண்டி வரும். கடந்த நிதியாண்டு அடிப்படையில், பார்த்தால் 3 சதவீத செஸ் வரியுடன் நீங்கள் ரூ.12,875 வருமான வரியாக செலுத்த வேண்டியிருந்திருக்கும். அப்படியானால் உங்களுக்கு கிடைக்கும் 'லாபம்' எவ்வளவு? வெறும் ரூ.177 மட்டுமே. ஆனால், வெளியே தெரிவது என்னவோ ரூ.40,000 சலுகை என்பது போன்ற தோற்றம்தான்.இப்போது தெரிகிறதா, கொடுப்பதை போல கொடுத்து பறிப்பதை போல பறித்த மத்திய அரசின் தந்திரம்? எனவே மாத வருமானதாரர்கள் மகிழ்ச்சியடைய இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.

No comments:
Post a Comment