பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான, 'ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுக்கூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம். மொழி பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி திறன் தேர்வு, செய்முறை தேர்வு போன்ற விபரங்களை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாமல், தேர்வு மையங்களுக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment