பத்துநாள் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.கடந்த டிச., 7ல் துவங்கிய பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு, 23ம் தேதி நிறைவு பெற்றது.அனைத்து பள்ளிகளுக்கும், 23 முதல் ஜன., 1 வரை பத்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
அதே நேரம், பொதுத்தேர்வை எதிர்கொள்ள தயாராக இருக்கும் மாணவருக்கு சிறப்பு வகுப்புகள் அந்தந்த வகுப்பாசிரியர் மூலம் நடத்தப்பட்டது. இந்நிலையில், விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவருக்கு, 98 ஆயிரத்து, 897 செட் புத்தகம், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, 57 ஆயிரத்து, 967 செட் புத்தகங்களும் தருவிக்கப்பட்டுள்ளன.
இவற்றை, அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி கடந்த வாரத்தில் நடந்தது.'புத்தக தட்டுப்பாடு தவிர்க்கப்பட வேண்டும்,கூடுதலாக ஒவ்வொரு பள்ளிக்கு அனுப்ப வேண்டும்,' என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்று பள்ளி திறக்கப்பட்ட பின் மாணவ, மாணவியருக்கு புத்தகம் வினியோகிக்கப்படும்.
No comments:
Post a Comment