www.asiriyar.net

Monday, 22 January 2018

CPS, ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் உணர்வுகளை அரசிடம் பிரதிபலிக்க வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குனரிடம் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

 இன்று(22.01.2018) அனைத்திந்திய ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில், மாநிலத் தலைவர் திரு.பரமசாமி அவர்கள், மாநிலப் பொருளாளர் திரு. சீனிவாசன் மற்றும் பல்வேறு மாநில மற்றும்  மாவட்ட   நிர்வாகிகள் தொடக்கக் கல்வி இயக்குனர் திரு.கருப்புசாமி அவர்களை நேரில் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் சந்தித்தனர். 

புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களுக்கு பேரவை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பேரவையின் 2018 ஆண்டிற்கான காலண்டர் இயக்குனர் அவர்களிடம் அளிக்கப்பட்டது.

அடுத்ததாக பேரவையின் சார்பில் கோரிக்கைகள் மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களிடம் வைக்கப்பட்டது.

1 . ஊதிய முரண்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களின் உணர்வுகளை அரசிடம் பிரதிபலிக்க வேண்டும். உடனடியாக ஊதிய முரண்பாட்டை களைய அரசிடம் அறிவுறுத்தி உரிய நிவாரணம் பெற்றுத் தர வேணுமென வலியுறுத்தப்பட்டது.

2 . 2003 பிறகு சேர்த்த ஆசிரிகளை பழைய ஓய்வூதியத்தில் சேர்க்க வேண்டும் 

3 . CPS  ரத்து செய்யப்பட வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

கோரிக்கைகளை கனிவுண்டன் 90 நிமிடத்திற்கு மேல் கேட்ட  மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தானும் அதனை புரிந்துள்ளதாகவும் இயன்ற வரை "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை- யின் " கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவவித்தார்.




1 comment:

  1. Moreover, the kia optima LX 1.6T models, deliver 28 mpg in the city and 37 mpg on the highway.
    kia optima mpg

    ReplyDelete