www.asiriyar.net

Monday, 29 January 2018

ஊதிய முரண்பாடு - தீக்குளிப்பு போராட்டம் நடத்த ஆசிரியர்கள் அதிரடி முடிவு

'தமிழக அரசின், எட்டாவது ஊதியக்குழுவில், முதுநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, மார்ச், 17ம் தேதி, தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும்' என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தீர்மானங்கள் விபரம்:தமிழக அரசின், எட்டாவது ஊதியக்குழுவின், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின், எட்டாவது ஊதியக் குழுவிலும், முதுகலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, மாநில தலைவர் மணிவாசகன் தலைமையில், மார்ச், 17ம் தேதி, 1,000 ஆசிரியர்கள் சென்னையில் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவர்.

மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகள் புறக்கணிக்கப்படும். மேல்நிலை கல்விக்கென தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 comment:

  1. The main competitors of Maserati Ghibli (2018) are Audi A7 (premium plus), Mercedes Benz CLS (550), and BMW M550i xDrive. Let's find out how the Italian sedan competes with its German rivals in different categories mentioned below.
    Maserati Ghibli Interior 2018

    ReplyDelete