பள்ளிகளில், ஆங்கில பாட புத்தகத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சுயசரிதையிலிருந்து, சில பகுதிகளை சேர்க்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மத்திய மற்றும் மாநில கல்வி துறைகளில், பாட புத்தகங்கள் குறித்து ஆலோசனை வழங்கும், சி.ஏ.பி.இ., எனப்படும் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின், இரண்டு நாள் கூட்டம், டில்லியில், இன்று துவங்குகிறது.
இது பற்றி வாரிய உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: மத்திய மற்றும் மாநில உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி வாரியங்களின் ஆங்கில பாட புத்தகங்களில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சுயசரிதையிலிருந்து, சில பகுதிகளை சேர்க்க, ௨௦௧௭ம் ஆண்டிலேயே ஆலோசிக்கப்பட்டது. இதுபற்றி, இந்த கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.மேலும், மருத்துவ அறிவியல் தொடர்பாக, குறுகிய கால சான்றிதழ் படிப்பு துவக்குவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முதலுதவி, மருத்துவமனை மேலாண்மை, வார்டு மேலாண்மை, ஆகியவற்றை, இந்த சான்றிதழ் படிப்பில் சேர்க்கவும் ஆலோசிக்கப்பட்டு, இந்த கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படும். கல்வி உரிமை சட்டத்தை விரிவுப்படுத்துவது உட்பட பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Toyota cars are the Good body control cars and very fuel eficiency cars
ReplyDelete