www.asiriyar.net

Friday, 5 January 2018

நிர்வாக இடமாறுதல் துவக்கம் : கோட்டையில் ஆசிரியர்கள் முகாம்

அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட இடமாறுதல் நடவடிக்கை, மீண்டும் துவங்கிஉள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ஆண்டு தோறும் மே மாதம், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். 

இதில், அனைத்து காலியிடங்களும் அறிவிக்கப்பட்டு, அவற்றில், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு ஏற்ப, இடமாறுதல் வழங்கப்படும்.பின், காலியாக உள்ள இடங்களுக்கு, விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், ஜூன் முதல் செப்., வரை இடமாறுதல் ஜரூராக நடந்தது. பள்ளிகளில் வகுப்புகள் நடக்கும் நிலையில், ஆசிரியர்களை மாற்றுவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதனால், இடமாறுதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து, பருவ தேர்வு விடுமுறையில் மாறுதல் வழங்கி, வகுப்புகள் துவங்கும் போது, ஆசிரியர்களை மாற்ற, அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, இடமாறுதல் நடவடிக்கை துவங்கி உள்ளது.

இந்த முறை இடமாறுதல் நடவடிக்கை, நேரடியாக பள்ளிக்கல்வி அமைச்சகம் மற்றும் முதன்மை செயலரின் மேற்பார்வையில் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதனால், இடமாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் வழியே, நேரடியாக செயலகத்தில் மனுக்களைகுவித்து வருகின்றனர்.

1 comment: