www.asiriyar.net

Wednesday, 17 January 2018

மாணவர்களின் அறிவாற்றலை அதிகரிக்க அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில நாளிதழ்: அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்து பள்ளிகளிலும் சிறுவர் மலர் மற்றும் ஆங்கில நாளிதழ் விநியோகிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணையை அவர் இன்று வழங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாணவர்களின் அறிவாற்றலை அதிகரிக்கவும், ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பறைக்கும் சிறுவர் மலர் மற்றும் ஆங்கில நாளிதழ் விநியோகிக்கப்படும் என்று கூறினார்.


மேலும், அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில நாளிதழ் விநியோகிப்பதற்கு ஆண்டுக்கு ரூ.3.68 கோடி நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். முன்னதாக ஆங்கில மோகத்தால் தனியார் பள்ளிகளை நோக்கி செல்கின்றனர்; அரசு பள்ளிகளின் தரம் உயரும்; மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

2 comments: