தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அவசர செலவுகளுக்கு 25 சதவீதம் வரை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சமூக பாதுகாப்பு திட்டங்களில் ஒன்றாக, தேசிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதில் பயனாளிகள்செலுத்திய தொகைக்கு ஏற்ப பென்ஷன் தொகை வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். இந்த திட்டத்தில் சேர்ந்தவர்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், பென்ஷன் சந்தாதாரர்களின் வசதிக்காக விதிகளில் தளர்வு செய்து ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, மேற்கண்ட ஓய்வூதிய திட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு சந்தா தொகை செலுத்தியவர்கள், அந்த நிதியில் 25 சதவீதத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு எடுத்துக்கொள்ளலாம்.அதாவது, குழந்தைகளின் உயர் கல்வி, அவர்களது திருமணம், வீடு, நிலம் வாங்குதல், புற்றுநோய், சிறுநீரக கோளாறு, பைபாஸ் உள்ளிட்ட இதய நோய் அறுவை சிகிச்சைகள், பக்கவாதம் போன்றவற்றுக்காக தனது நிதியில் இருந்து பணம் அடுக்க அனுமதி உண்டு.
3 முறை மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்த முடியும். அதேநேரத்தில், முதல் முறை வீடு வாங்குவதற்காக மட்டுமே இந்த சலுகை உண்டு. மற்றபடி, பரம்பரை சொத்து தவிர சந்தாதாரர் தனது பெயரில் அல்லது கூட்டாக சொந்த வீடு, பிளாட் இருந்தால் இந்த சலுகை கிடைக்காது என ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
The Toyota Corolla iM Hatchback gets a 1.8L engine which produces about 137hp of power.
ReplyDelete