www.asiriyar.net

Thursday, 18 January 2018

அனைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும்...ரிசர்வ் வங்கி



புழக்கத்தில் உள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.




ரிசர்வ் வங்கியால் 14 வகையான 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இத குறித்து ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''10 ரூபாய் நாணயங்களின் உண்மைத்தன்மை குறித்து வர்த்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது என்றும், அவற்றை பெற தயக்கம் காட்டுவதாக தெரியவந்துள்ளது.10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக செல்லும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசின் பல்வேறு திட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலும் சமூக கலாச்சார மதிப்பு அடிப்படையில் புதிய வகையிலான 10 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments: