பிளஸ் 1 வகுப்புக்கு பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செய்முறை தேர்வுக்கான பாடப்பகுதிகள் தெரிவிக்கப்படாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 வகுப்பை போல, பிளஸ் 1க்கும் இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், பிளஸ் 1 பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகே, பிளஸ் 2பொது தேர்வை எழுத வேண்டும்.இறுதியில், பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரண்டு வகுப்புகளின் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.அதனால், பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத மாணவர், பிளஸ் 2வை முடிக்கும் முன், பிளஸ் 1ல் தோல்வியடைந்த பாடத்துக்கும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதன் பிறகே, உயர் கல்வி படிப்பில் சேர முடியும்.இந்நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறை தேர்வுநடத்துவதில், கல்வியாண்டின் துவக்கம் முதல், குழப்பம் நிலவுகிறது.
செய்முறை தேர்விலும், அக மதிப்பீட்டிலும், மாணவர்களுக்கு எத்தனை மதிப்பெண் வழங்கப்படும் என்பதை, பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தி உள்ளது.ஆனால், பொது தேர்வுக்கான செய்முறை தேர்வு எப்படி இருக்கும்; எந்த பாடத்தில் இருந்து, செய்முறை தேர்வு வினாக்கள் இடம்பெறும்.அதற்கான மதிப்பெண் எவ்வளவு; தேர்வு எப்போது நடக்கும்;பதிவேட்டுக்கான மதிப்பெண் எவ்வளவு ஆகிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.அதனால், பிளஸ் 1 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்

No comments:
Post a Comment