www.asiriyar.net

Saturday, 30 December 2017

போலீஸ் வேலைக்கு விண்ணப்பம்:கமிஷனர் ஆபிசில் உதவி மையம்

போலீஸ் வேலைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் மொத்தம் 6,140 பணியிடங்கள் காலியாகவுள்ளது.
இதில், 5,538 இரண்டாம் நிலை காவலர், 365 இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் 237 தீயணைப்பு வீரர்கள் பணியிடம் அடங்கும்.
இக்காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தேர்வு நடத்துகிறது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. எழுத்து தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்கிறது. ஆன்லைன் மற்றும் அஞ்சல் துறை மூலமாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்வோருக்கு, ஜன., 27ம் தேதியும், அஞ்சல் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க ஜன., 30ம் தேதியும் கடைசி நாளாகும்.ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தரை தளத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment