www.asiriyar.net

Friday 15 December 2017

தலைமை ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும்: வைகோ

தமிழக உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 950 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கடந்த ஜூன் மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல், 4 ஆயிரத்து 84 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், 17 ஆயிரம் தாற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல அறிவிப்புகள்செய்யப்பட்டன. பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு புரட்சிகர திட்டங்களைச் செயல்படுத்த அறிவிப்புகள் செய்யப்பட்டன. கல்வித்துறையின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களுடையது. எனவே, ஆசிரியர் பணி இடங்களை முறையாக நிரப்ப வேண்டியதுஅவசியம். ஆனால், தமிழகத்தில் 950 உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 மேலும், 5 முதன்மைக் கல்வித்துறை அதிகாரிகள் பணி இடங்களும், 35 மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் பணி இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே, கல்வித்துறையில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டும் எனில், முதலில் அடிப்படைக் கட்டமைப்புகளிலும், காலிப் பணி இடங்களை நிரப்புவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment