www.asiriyar.net

Wednesday 27 December 2017

தமிழக அரசு பள்ளிகளில் காலிப்பணியிட விவரம் 29ம் தேதி வரை பதிவு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கலந்தாய்வு தொடர்பாக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி காலிப்பணியிட விவரங்கள் இணையதளம் மூலம் முதன்முறையாக பள்ளிகளில் பதிவு செய்யப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் டிச.26ம் தேதிக்குள்(நேற்று) விவரங்களை பதிவு செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் கிறிஸ்துமஸ் மற்றும் தொடர் விடுமுறையால் பணிகளை முழுமையாக முடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதற்கிடையில் பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோவன் நேற்று முன்தினம் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், காலிப்பணியிட விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யப்படுவதற்கு வரும் 29ம் தேதி பிற்பகல் வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment