www.asiriyar.net

Tuesday, 19 December 2017

2018ல் 23 நாட்கள் அரசு விடுமுறை - தமிழக அரசு பட்டியல் வெளியீடு.

ஆண்டுதோறும் விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை, தமிழ்நாடு அரசு வெளியிடும். இது முன்கூட்டியே தயாராவதற்கு உதவியாக அமையும். இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


தை பொங்கல் ஞாயிறு அன்று வருவதால் ஒருநாள் லீவு போச்சே என்று கவலைப்படுகின்றனர் அரசு ஊழியர்கள். 2018ஆம் ஆண்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 4 பண்டிகை நாட்கள் ஞாயிறுகிழமையில் வருகிறது.


2018ஆம் ஆண்டு மொத்தம் 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் 4 நாட்கள் ஞாயிறுகிழமையில் வருகிறது. மற்றவை வார மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்றுள்ளது.

மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 8.6.1957 அன்று நாளிட்ட பொது-1, 20-25-26-ம் எண் அறிவிக்கையின்படி, 1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் 25-ம் பிரிவில் விளக்கம் என்பதன் கீழ் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட விளக்கம் ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும், 2018-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு இதனால் அறிவிக்கிறது.

விடுமுறை நாட்கள்:

01.2018 ஆங்கில புத்தாண்டு - திங்கட்கிழமை

14.01.2018 தை பொங்கல் - ஞாயிற்றுக்கிழமை

15.01.2018 திருவள்ளுவர் தினம் - திங்கட்கிழமை

16.01.2018 உழவர் திருநாள் - செவ்வாய்க்கிழமை

26.01.2018 குடியரசு தினம் - வெள்ளிக்கிழமை

8.3.2018 தெலுங்கு வருடப்பிறப்பு - ஞாயிற்றுக்கிழமை

29.3.2018 மகாவீர் ஜெயந்தி - வியாழக்கிழமை

30.3.2018 புனித வெள்ளி - வெள்ளிக்கிழமை

1.4.2018 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு - ஞாயிற்றுக்கிழமை

14.4.2018 தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் - சனிக்கிழமை

1.5.2018 மே தினம் - செவ்வாய்க்கிழமை

15.6.2018 ரம்ஜான் - வெள்ளிக்கிழமை

15.8.2018 சுதந்திர தினம் - புதன்கிழமை

22.8.2018 பக்ரீத் - புதன்கிழமை

2.9.2018 கிருஷ்ண ஜெயந்தி - ஞாயிற்றுக்கிழமை

13.9.2018 விநாயகர் சதுர்த்தி - வியாழக்கிழமை

21.9.2018 மொகரம் - வெள்ளிக்கிழமை

2.10.2018 காந்தி ஜெயந்தி - செவ்வாய்க்கிழமை

18.10.2018 ஆயுத பூஜை - வியாழக்கிழமை

19.10.2018 விஜயதசமி - வெள்ளிக்கிழமை

6.11.2018 தீபாவளி - செவ்வாய்க்கிழமை

21.11.2018 மிலாது நபி - புதன்கிழமை

25.12.2018 கிறிஸ்துமஸ் - செவ்வாய்க்கிழமை

இந்த ஆண்டு 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பொங்கல், தெலுங்கு வருடப்பிறப்பு கிருஷ்ணஜெயந்தி ஆகிய 4 பண்டிகை நாட்கள் ஞாயிறு கிழமைகளில் வருகிறது. பண்டிகை நாட்கள் சண்டே வந்தா டேக் இட் ஈசி அரசு ஊழியர்களே!

No comments:

Post a Comment