www.asiriyar.net

Saturday, 11 November 2017

JACTTO GEO : நீதிபதி பற்றி அவதூறு - 2 ஆசிரியர் சஸ்பெண்ட்

ஜாக்டோ ஜியோ சார்பில், மத்திய மாநில அரசுகளை கண்டித்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு  கடந்த மாதம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 

தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவரும், வெள்ளேகவுண்டன் பாளையம் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியருமான பொன்.ரத்தினம்,  தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் திருக்குமரன், தமிழ்நாடு அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க  மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்ட 5  பேரும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக, தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்த னர்.

இதையடுத்து தலைமையாசிரியர் பொன்.ரத்தினம், ஆசிரியர் திருக்குமரன் ஆகிய 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி  அலுவலர் பழனிசாமி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment