பள்ளிக் கல்வித்துறையில் அடிக்கடி இணை இயக்குநர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக சபீதா இருந்தபோதே இந்த அதிரடி மாற்றங்கள் அடிக்கடி நடக்கும். அது இப்போதும் தொடர்கிறது.
கடந்த 6 மாதத்துக்கு முன்புதான் இணை இயக்குநர்கள் மாற்றப்பட்டனர். தற்போது அவர்கள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் இணை இயக்குநர் மற்றும் அதற்கு இணையான பணியிடங்களில் பணியாற்றும் கீழ் கண்ட அலுவலர்கள் நிர்வாக நலன் கருதி மாறுதல் செய்யப்படுகின்றனர்.
கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் குப்புசாமி, பள்ளிக் கல்வித்துறை(பணியாளர் தொகுதி) இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
மேற்கண்ட பணியாளர் தொகுதி இணை இயக்குநர் சசிகலா ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்எம்எஸ்ஏ இணை இயக்குநர் குமார் கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். எஸ்எஸ்ஏ இணை இயக்குநர்
தேவி தொடக்க கல்வி த்துறையின் (நிர்வாகம்) இணை இயக்குநராகவும், அந்த பணியில் இருந்து இணை இயக்குநர் நாகராஜ முருகன் ஆர்எம்எஸ்ஏ இணை இயக்குநராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் எஸ்எஸ்ஏ இணை இயக்குநராகவும், மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் உத்தரவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment