www.asiriyar.net

Saturday, 4 November 2017

தேசிய திறனாய்வு தேர்வு தேதி மாற்றம்

இன்று நடக்கவிருந்த, தேசிய திறனாய்வு தேர்வு, நவ.,18க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.




மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முதற்கட்ட தேசிய திறனாய்வு தேர்வு, தமிழகம் முழுவதும், இன்று நடப்பதாக இருந்தது. மழை வெள்ளத்தால், பல்வேறு மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இன்று நடக்கவிருந்த தேசிய திறனாய்வு தேர்வு, ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு, நவ., 18 இல் நடத்தப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment