www.asiriyar.net

Friday 3 November 2017

மத்திய அரசு ஊழியர்களின் கல்வி செலவு படி அதிகரிப்பு

மத்திய அரசு ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் படியை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின், குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஒரு குறிப்பிட்ட தொகை, சிறப்பு படியாக வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அந்த தொகையை, 54 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது; இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்த தொகையில், 54 ஆயிரம் ரூபாய் வரை திரும்ப பெற முடியும். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் இருவரும், மத்திய அரசு ஊழியராக இருந்தால், அவர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே இந்த தொகை கோரி விண்ணப்பிக்க முடியும்.

No comments:

Post a Comment