கல்வித்துறை செயல்பாடு குறித்து அத்துறை அதிகாரிகளின் ஆய்வு அறிக்கைகளில் திருப்தி அளிக்காததால், கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி அறிக்கை அளிக்க கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கற்றல், கற்பித்தல் மேம்பாடு, மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம், மாணவர்கள் கற்றல் திறன், பள்ளிகளில் அடிப்படை வசதி குறித்து கல்வி அதிகாரிகள்ஆய்வு செய்கின்றனர்.மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள், 14 வகை நலத்திட்டங்கள், அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டங்களில் நடக்கும் கட்டடப் பணிகள், புதிய வகுப்பறை, பள்ளி சுற்றுச்சுவர் பணிகள் மற்றும் 'நபார்டு' திட்டத்தின் கட்டுமான பணிகள் குறித்தும் மாவட்ட கல்வி அதிகாரிகள்சார்பில் அறிக்கை தயாரித்து, துறை செயலருக்கு அளிக்கப்படுகின்றன.
மேம்போக்காக உள்ள இந்த அறிக்கைகளில் திருப்தி இல்லாததால், கலெக்டர்கள் மூலம் விரிவான ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி கல்வித்துறை செயல்பாடு குறித்து கலெக்டர்கள் ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் விரிவான அறிக்கை அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர்களுக்கு, துறை செயலர் பிரதீப் யாதவ் கடிதம் அனுப்பி உள்ளார்.அதில், 'கல்வித் துறையில் ஆர்வம் உள்ள பல கலெக்டர்கள் பள்ளிகளில் ஆய்வு செய்கின்றனர்.
இது கற்றல் கற்பித்தல் மேம்படவும், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உந்துதலாகவும் உள்ளது. இது கல்வித்தரம் அதிகரிக்க வழிவகுக்கும். இதுபோல் அனைத்து கலெக்டர்களும் ஆய்வு செய்து முழு அறிக்கை, கல்வி வளர்ச்சிக்கான சிறப்பு ஆலோசனைகள் வழங்க வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.கண் துடைப்புக்காக பெயரளவில் ஆய்வுகள் நடத்தி அறிக்கை சமர்ப்பித்த கல்வி அதிகாரிகளுக்கு, செயலரின்இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment