www.asiriyar.net

Sunday, 5 November 2017

ஊதியக்குழு அறிவிப்பில் அதிருப்தி: போராட்டம் நடத்த ஆசிரியர் கூட்டணி முடிவு

ஊதியக்குழுவால் பலன் இல்லை. நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் 'ஜாக்டோ -ஜியோ' போராடாவிட்டால் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மோசஸ் தெரிவித்தார்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மோசஸ் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் பாலசந்தர், பொருளாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன்பின் மாநில தலைவர் மோசஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006ல் அறிவிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மறுக்கப்பட்டது. ஜாக்டோ -ஜியோ தொடர் போராட்டம் நடத்தியும், எட்டாவது ஊதியக்குழுவிலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஊதியக்குழு அறிவிப்பால் எந்த பலனும் இல்லை. அறிவிக்கப்பட்டுள்ள ஊதியக்குழு குறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மிகுந்த வேதனையை தெரிவிக்கிறது.

தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு

இப்பிரச்னைக்கு நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்ட வேண்டும். வழிகாட்டவில்லை என்றால் ஜாக்டோ -ஜியோ இக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி உடனே போராட்டம் அறிவிக்க வேண்டும். ஜாக்டோ -ஜியோ போராட்டம் அறிவிக்காவிட்டால் தமிழ்நாடு ஆரம்ப ஆசிரியர் கூட்டணி அடுத்த நாளே தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment