www.asiriyar.net

Tuesday, 7 November 2017

நீதிமன்ற உத்தரவுகளை உடனே நிறைவேற்றுங்க! : அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி செயலர் அறிவுறுத்தல்

'நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், பாடத்திட்டம், பள்ளிகளின் செயல்பாடு, ஆசிரியர்கள் நியமனம், கற்பித்தல் முறை, தொழில்நுட்பம் என, அனைத்தையும் மேம்படுத்த, புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

வழக்கு பதிவு : இதையொட்டி, பல்வேறு வழக்குகளும், உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 'நீட்' தேர்வு பயிற்சி மையங்கள் அமைத்தல், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்கள் நியமனம், பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு விதிகள் வகுத்தல், அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை தொடர்பாக, பல உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

அதேபோல, மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது, மாணவர்கள், ஆசிரியர்களின் ஆதார் விபரங்களை சேகரிப்பது, திட்ட குழுவின் பரிந்துரைப்படி நிதியை பெற்று, அதன் செயல்திறன் அறிக்கையை தாக்கல் செய்வது என, பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசும் பிறப்பித்துள்ளது.

தாமதம் கூடாது : இதுகுறித்து, தமிழக அரசின் பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் இயக்குனர்களுக்கு, பல்வேறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், 'நீதிமன்ற உத்தரவுகளை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற வழக்குகளில், நீதிபதிகள் கேட்கும் தகவல்களை விரைந்து வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை, உரிய விதிகளின்படி பின்பற்ற வேண்டும்; தாமதம் கூடாது' என, குறிப்பிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment