www.asiriyar.net

Friday, 3 November 2017

பணி நிரவலில் சென்ற ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் - ஆசிரியர்கள் கோரிக்கை

தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த மே மாதம் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை பொது மாறுதல் கலந்தாய்வு நடந்து முடிந்தது. அப்பொழுது முதன் முறையாக அனைத்து பணியிடங்களுக்கும் ஆன் லைன் மூலம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு நடைபெற்றது. 

இணையத் தொடர்பு காரணமாக சில இடங்களில் கலந்தாய்வு தாமதமானது. அதே நேரத்தில் எவ்வித புகாருக்கும் இடம் கொடாமல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இது ஆசிரியர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல்கள் சத்தமில்லாமல் நடந்து வருவது ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதப் பொருளாகி விட்டது. இதனால் கடந்த மே மாதம் பணி நிரவலில் மாற்று ஒன்றியங்களுக்கு சென்ற ஆசிரியர்கள் மீண்டும் தங்கள் ஒன்றியங்களுக்கு வர இயலாத சூழல் உள்ளது.
  இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
  
கடந்த மே மாதம் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றபொழுது மாணவர்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பல ஆசிரியர்கள் பணி நிரவலில் ஒன்றியத்திற்குள்ளும், பிற ஒன்றியங்களுக்கும் மாறுதல் செய்யப்பட்டனர். அவ்வாறு மற்ற ஒன்றியங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டாலும் அவர்களது பணி மூப்பு என்பது அவர்கள் முன்னர் பணியாற்றிய ஒன்றியங்களிலேயே தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. 

அப்பொழுது மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் பட்சத்தில் பணி நிரவலால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை மீளவும் அவரவர் பணியாற்றிய பள்ளிகளுக்கோ அல்லது ஒன்றியங்களுக்கோ பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என தொடக்கக்கல்வி இயக்குனர் உறுதியளித்தார். 

ஆனால் அதன் பின்னர் விதிகளுக்கு முரணாக பல்வேறு மாறுதல்கள் வழங்கப்பட்டு வந்தன. இதனை கண்டித்து எங்கள் அமைப்பின் மூலம்   மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகங்கள் முன்பு கடந்த ஜூலை 31ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன் விளைவாக விதிகளை மீறி மாறுதல்கள் பெற்றவர்களை இது வரை விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

  இக்கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நிறைவடைந்த நிலையில் தற்பொழுது 2017 செப்டம்பர் முதல் தேதியின் அடிப்படையில் ஆசிரியர் மாணவர் விகிதம் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களால் கணக்கெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கூடுதல் தேவை பணியிடங்களும், சில உபரி ஆசிரியர் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

இப்பணியிடங்களில் ஏற்கனவே பணி நிரவலில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களைத்தான் மீள பணியமர்த்த வேண்டும். இதை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்காமல் மற்ற மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்காக இப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு வருவதாக தற்பொழுது புகார் எழுந்துள்ளது. 

இதனால் இங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே புதிதாக கண்டறியப்பட்டுள்ள கூடுதல் பணியிடங்கள்pல் ஏற்கனவே பணி நிரவலில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் உபரியாக தற்பொழுது பணியாற்றும் ஆசிரியர்களை மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும்.

  மேலும்; எவ்வித உத்தரவு இல்லாமல் அரசாணைகளுக்கு புறம்பாக ஆசிரியர்களை ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாற்று பணி என்று மாறுதல் செய்கின்றனர். அவ்வாறு மாற்று பணிக்கு சென்ற ஆசிரியர்கள் மற்ற ஒன்றியங்களுக்கு சென்றாலும் அவர்களது ஊதியம் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகள் மூலம் பெற்று வழங்கப்படுகிறது. 

சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணிக்கு சென்றாரா என்று தெரியாமலேயே ஊதியம் வழங்குவது அரசு விதிகளுக்கு புறம்பான செயலாகும். இது குறித்து எங்கள் மாநில அமைப்பின் மூலம் தொடக்கக்கல்வி இயக்குனரின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறோம். உரிய நடவடிக்கை இயக்குனர் எடுப்பார் என நம்புகிறோம். இல்லையேல் மாநில மையம் வழிகாட்டுதல் படி அடுத்த கட்ட நடிவடிக்கை எடுப்போம் என அவர்; கூறினார்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Need mutual transfer (BT english) within kanchipuram district pls contact 9025049439

    ReplyDelete