அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை ஒருகை பார்த்துவிட வேண்டுமென பார்தி ஏர்டெல் நிறுவனம் முடிவெடுத்து விட்டது போல தெரிகிறது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் செல்லுபடியாகும் அதன் 360ஜிபி டேட்டா திட்டத்தை அறிவித்து முழுதாய் இரண்டு நாட்கள் கூட முடிவடையாத நிலைப்பாட்டில் ஏர்டெல் நிறுவனம் அதன் அடுத்த அதிரடி நடவடிக்கையை அறிவித்துள்ளது.
ரூ.448/- என்ற புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆனது ரூ.448/- என்ற விலைப்புள்ளியை பெற்றுள்ளது. இந்த புதிய கட்டணத்திட்டம் நேரடியாகவே ஜியோவின் ரூ.399 திட்டத்தை களம்காண்கிறது. ரூ.399/- திட்டமானது சமீபத்தில் சீரமைக்கப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.
70 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த புதிய 448 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டா என மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் 70ஜிபி அளவிலான டேட்டாவை பெறலாம்.
அதாவது கிட்டத்தட்ட ஜியோவின் ரூ.399 திட்டத்தை போலவே.! 1ஜிபி அளவிலான டேட்டாவின் வரம்பு முடிந்த பின்னர் இந்த புதிய திட்டத்தின் கீழ் நாள்தோறும் கிடைக்கும் 1ஜிபி அளவிலான டேட்டாவின் வரம்பு முடிந்த பின்னர் இணைய வேகம் 64 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டேட்டாவை தவிர்த்து ரூ.448/- திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாளும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் உடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு நன்மைகளையும் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் ரோமிங் அழைப்புகளை நிகழ்த்தலாம்.
ஒவ்வொரு வாரமும் 1000 நிமிடங்கள் இருப்பினும், ஜியோவின் திட்டங்களை போல அழைப்புகள் வரம்பற்றவை அல்ல. ஏர்டெல் ரூ.448/- திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 250 நிமிடங்கள் மட்டுமே இலவச அழைப்புகள் கிடைக்கும்.
ஒவ்வொரு வாரமும் 1000 நிமிடங்கள் என்ற வரம்பில் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். இந்த இலவச அழைப்பு வரம்பை மீறியதும், நிமிடத்திற்கு 30 பைசா வசூலிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இருப்பினும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
ஆக, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் முன்னர், நீங்கள் இந்த திட்டத்தை பெற தகுதியானவாரா என்பதை ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்திடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். பின்னர் உங்கள் தொலைபேசியில் உள்ள மைஏர்டெல் பயன்பாட்டிற்கு சென்று ரூ.448/- ரீசார்ஜ் செய்து கொள்ளவும்.
சீரமைக்கப்பட்ட ஜியோவின் ரூ.399/- திட்டம் சமீபத்தில் சீரமைக்கப்பட்ட ஜியோவின் ரூ.399/- திட்டத்தை பொறுத்தமட்டில், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பயனர்கள் பெறலாம். 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் வரம்பற்ற உள்ளூர் மற்றும் ரோமிங் அழைப்பு நன்மைகளையும் அனுபவிக்கலாம்.
No comments:
Post a Comment